உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாணவியை ஈவ்டீசிங் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு

 மாணவியை ஈவ்டீசிங் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு

நெட்டப்பாக்கம்: கல்லுாரி மாணவியின் புகைப்படத்தை முகநுாலில் பதிவு செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கரியமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த 18 வயது பெண், அரசு கல்லுாரியில் பி.சி.ஏ., முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 15ம் தேதி இவரது பிறந்தநாள் அன்று அதே பகுதியைச் சேர்ந்த கிஷ்வின், 20, என்பவர் அவரது புகைப்படத்தை முகநுாலில் பதிவிட்டுள்ளார். இதனை அம்மாணவி கண்டித்தார். இருப்பினும் அவர், கல்லுாரி சென்று வரும்போதெல்லாம் தொடர்ந்து அம்மாணவியை தொடர்ந்து ஈவ்டீசிங் செய்து வந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் கிஷ்வின் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை