உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கலை, அறிவியல், வணிகவியல் படிப்பு இறுதி கட்ட மாப் அப் கவுன்சிலிங் நாளைக்குள் முன்னுரிமை கொடுக்க சென்டாக் அறிவுறுத்தல்

கலை, அறிவியல், வணிகவியல் படிப்பு இறுதி கட்ட மாப் அப் கவுன்சிலிங் நாளைக்குள் முன்னுரிமை கொடுக்க சென்டாக் அறிவுறுத்தல்

புதுச்சேரி: கலை, அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு காலியாக உள்ள 4,676 இடங்களுக்கான இறுதி கட்ட மாப் அப் கவுன்சிலிங் நடத்த சென்டாக் முடிவு செய்துள்ளது. சென்டாக் கலை, அறிவியல் படிப்புகளுக்கு இதுவரை மூன்று கட்ட கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. அடுத்து மாப் அப் கவுன்சிலிங் நடத்த சென்டாக் முடிவு செய்துள்ளது. இந்த கலந்தாய்வில், பங்கேற்க விரும்பும் மாணவர்கள் நாளை 19ம் தேதி காலை 10:00 மணிக்கு தங்களுடைய டேஷ்போர்டு வாயிலாக உள்ளே நுழைந்து, கல்லுாரி, பாடப்பிரிவு முன்னுரிமையை கொடுக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தந்த படிப்புகள் இந்த கலந்தாய்வில், நீட் அல்லாத படிப்புகளான பி.டெக்., பி.எஸ்சி., அக்ரி தோட்டக்கல்லுாரி, கால்நடை மருத்துவ படிப்பு, பி.எஸ்சி., நர்சிங்., பி.பி.டி., பாராமெடிக்கல் படிப்புகள், பி.பார்ம், பி.ஏ., எல்.எல்.பி., ஐந்தாண்டு சட்டப்படிப்பு, டிப்ளமோ பாராமெடிக்கல் படிப்புகள், பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளிட்ட யு.ஜி., கலை அறிவியல், வணிகவியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இன்ஜினியரிங் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நிரம்பாத ஜோசா சுயநிதி இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்பட உள்ளது. எனவே சென்டாக்கில் விண்ணப்பித்துள்ள மாணவர்கள் ஜே.இ.இ., ஸ்கோருடன் கல்லுாரி, பாடப்பிரிவை முன்னுரிமை கொடுக்கலாம். ஜே.இ.இ., தரவரிசை பட்டியலில் நிரம்பாத இடங்கள் அடுத்து பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும். எனவே ஜே.இ.இ., ஸ்கோர் வைத்தில்லாத மாணவர்களும் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், காமராஜர் இன்ஜினியரிங் கல்லுாரி, மகளிர் பொறியியல் கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஏற்கனவே மூன்றாம் கட்ட கலந்தாய்வில் கொடுக்கப்பட்ட கல்லுாரி, பாடப்பிரிவு முன்னுரிமை இந்த மாப் அப் கவுன்சிலிங்கிற்கு எடுத்து கொள்ள மாட்டாது. எனவே புதிதாக மாப் அப் கவுன்சிலிங்கில் பாடபிரிவு முன்னுரிமை கொடுக்க வேண்டியது கட்டாயம். பாடப்பிரிவு விருப்பப் பட்டியல் காலியாக இருந்தால், இருக்கை ஒதுக்கப்படாது. மாப் அப் சுற்றில் சீட் ஒதுக்கப்பட்டால், முதல் கலந்தாய்வு, இரண்டாம் கலந்தாய்வு, மூன்றாம் கலந்தாய்வுகளில் ஒதுக்கப்பட்ட சீட்டுகள் தானாகவே ரத்து செய்யப்படும். இதே பாடபிரிவு முன்னுரிமை கொடுக்காமல் காலியாக இருந்தாலும் சீட் ஒதுக்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு www.centacpuducherry.inஎன்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது அவர்களின் உள்நுழைவு டேஷ்போர்டில் உள்ள குறைகள் விருப்பத்தின் மூலம் கேள்விகளைச் சமர்ப்பிக்கலாம். உதவிக்கு 0413--2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் என, சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை