உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மத்திய பட்ஜெட் மா.கம்யூ., விமர்சனம்

 மத்திய பட்ஜெட் மா.கம்யூ., விமர்சனம்

புதுச்சேரி: மத்திய பட்ஜெட், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என மா.கம்யூ., குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பெருமாள் விடுத்துள்ள அறிக்கை; மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை. மத்திய வரியில் இருந்து பிற மாநிலங்கள் 41 சதவீத பங்கை பெறும் நிலையில், புதுச்சேரிக்கு அந்த உரிமை மறுக்கப்படுகிறது. 16வது நிதிக்குழுவின் வரம்பிற்குள் புதுச்சேரியைச் சேர்க்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை இந்த பட்ஜெட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு ஆண்டுதோறும் கிடைக்க வேண்டிய ரூ. 3000 கோடிக்கும் அதிகமான நிதி இழப்பு ஏற்படுகிறது. புதுச்சேரியை வெளிச்சந்தையில் கடன் வாங்கத் தூண்டிய மத்திய அரசு, இப்போது அந்தக் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்து, கடன் வலைக்குள் சிக்க வைத்து வேடிக்கை பார்க்கிறது. மத்திய பட்ஜெட், கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான பட்ஜெட். பிரதமர் மோடி வாக்குறுதி அளித்த 'பெஸ்ட் புதுச்சேரி' இன்று வேஸ்ட் ஆகிவிட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை