கான்ஸ்டபுள் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு
புதுச்சேரி: போலீஸ் கான்ஸ்டபுள் பணிக்கான காத்திருப்போர் பட்டியிலில் உள்ளவர்களுக்கு வரும் 6ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. பு துச்சேரியில் சமீபத்தில் போலீஸ் கான்ஸ்டபுள் தேர்வு நடந்து. இதில், தேர்ச்சி பெற்றவர்கள் பணியில் சேர்ந்தனர். தேர்ச்சியடைந்தவர்களில் சிலர் பணியில் சேராமல் உள்ளனர். இப்பணியிடங்களுக்கு காத்திருப்போர் பட்டியிலில் உள்ளவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 6ம் தேதி நடக்கிறது. துமாஸ் வீதியில் உள்ள தலைமையக எஸ்.பி., அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடக்கும் சான்றிதழ் சரிபார்க்கும் பணி யில் தேர்வர்கள் தங்கள் அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என, காவல் துறை சிறப்பு அதிகாரி ஏழுமலை தெரிவித்துள்ளார்.