உள்ளூர் செய்திகள்

செடல் உற்சவம்

நெட்டப்பாக்கம்: தனிக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் 4ம் ஆண்டு செடல் உற்சவ திருவிழா (மே 10) துவங்கியது. நெட்டப்பாக்கம் அடுத்த தனிக்குப்பம் சித்திவிநாயகர், முத்துமாரியம்மன், நாகமுத்தம்மன் கோவில் 4ம் ஆண்டு செடல் உற்சவ திருவிழா (மே 10) துவங்கியது. அதையொட்டி, காலை 6 மணிக்கு சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், நாகத்தம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, 9 மணிக்கு ஊரல் குளக்கரையில் கரகம் அலங்கரித்து ஊர்வலம் நடந்தது. மே 11 மாலை 3 மணிக்கு செடல் உற்சவம், மே 12 காலை 7 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை