உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு

 வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி தலைமை தேர்தல் அதிகாரி ஆய்வு

புதுச்சேரி: சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணியை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் ஆய்வு செய்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த 4ம் தேதி முதல் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்து வருகிறது. இப்பணியை புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், துணை தேர்தல் அதிகாரிகள் ஆதார்ஷ், தில்லைவேல் ஆகியோர், முத்தியால்பேட்டை, ராஜ்பவன் தொகுதிகளில் ஓட்டுச்சாவடி அதிகாரிகள் மேற்கொள்ளும் பணிகளை ஆய்வு செய்தனர். ஓட்டுச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு களத்தில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். பொதுமக்களுக்கு பொதுவாக எழும் சந்தேகங்கள், அவற்றை நிவர்த்தி செய்யப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்தனர். மேலும் எத்தனை படிவங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது, அவற்றில் திரும்ப பெறப்பட்டது, மின்னணு பதிவேற்றம் குறித்தும் கேட்டறிந்தனர். மின்னணு பதிவேற்றம் பணியில் ஏற்படும் இடர்பாடுகளை எப்படி கையாள வேண்டும் என, ஆலோசனை வழங்கினர். வாக்காளர்களிடம் ஓட்டுச்சாவடி அதிகாரிகள் எப்படி படிவத்தை பூர்த்தி செய்து தருகின்றனர் என, விசாரித்தனர். ஆய்வின்போது வாக்காளர் பதிவு அதிகாரி கந்தசாமி, துணை வாக்காளர் பதிவு அதிகாரிகள் பிரிதிவி, சிவக்குமார், தேர்தல் துறை அதிகாரிகள் உட னிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி