சாலை அமைக்கும் பணி முதல்வர் துவக்கி வைப்பு
வில்லியனுார்: மங்கலம் தொகுதியில் தார் சாலை அமைக்கும் பணியை முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மங்கலம் தொகுதியில் கீழூர் - கீழ்சாத்தமங்கலம் சாலை, மணக்குப்பம் - மலட்டாறு - அரியூர் சாலை மற்றும் அரியூர்- பங்கூர் - சிவாரந்தகம் சாலை பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.11 கோடி மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமை தயங்கினார். அமைச்சர் தேனீ ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பாலமுருகன், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் வீரச்செல்வன், செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவி பொறியாளர்கள் சரவணன், ஜலீல், இளநிலை பொறியாளர் கலைச்செல்வன் உட்பட பலர் உடனிருந்தனர்.