மேலும் செய்திகள்
வயிற்று போக்கு தடுப்பு முகாம்
15-Jun-2025
புதுச்சேரி: திலாசுபேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் வயிற்றுப்போக்கு தடுப்பு பிரசார திட்டத்தை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்து, குழந்தைகள் மாத்திரைகள் வழங்கினார்.இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் ஆலோசனைப் படி, கடந்த 2ம் தேதி முதல் ஜூலை 31ம் தேதி வரை வயிற்றுப்போக்கு தடுப்பு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி, புதுச்சேரி அரசு நலவழித்துறை சார்பில், திலாசுபேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் வயிற்றுப்போக்கு தடுப்பு பிரசார திட்டம் துவக்க விழா நேற்று நடந்தது.முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, பிரசாரத்தை துவக்கி வைத்து, 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 2 ஓ.ஆர்.எஸ். பாக்கெட்கள், 14 ஜின்க் மாத்திரைகளை வழங்கினார்.இதில், எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், ரமேஷ், சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன், தேசிய சுகாதார இயக்க இயக்குநர் கோவிந்தராஜ், துணை இயக்குநர்கள் ஆனந்தலட்சுமி, ஷமிமுனிசா பேகம், ரகுநாதன், மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி தமிழரசி, திலாசுப்பேட்டை பெண்கள் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா உட்பட பலர் பங்கேற்றனர். வயிற்றுப்போக்கு தடுப்பு பிரசார திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 5 வயது வரை உள்ள 74 ஆயிரத்து 390 குழந்தைகள் பயன்பெறுவர் என, சுகாதாரத்துறை தெரிவித்தது.
15-Jun-2025