உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ேஹாம்-ஸ்டேக்கள் ஒழுங்குபடுத்தப்படும் முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்

ேஹாம்-ஸ்டேக்கள் ஒழுங்குபடுத்தப்படும் முதல்வர் ரங்கசாமி திட்டவட்டம்

புதுச்சேரி : சட்டசபை கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்பிரகாஷ்குமார் (சுயேச்சை): புதுச்சேரி குடியிருப்பு மத்தியில் உள்ள பாரம்பரிய வீடுகள் ேஹாம் ஸ்டே என்ற பெயரில் தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இவற்றை அரசு கண்காணிப்பதும் கிடையாது. ேஹாம் டேவில் தங்கும் சுற்றுலா பயணிகள அருகில் உள்ள வீடுகளில் முன்பு வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.நேரு(சுயேச்சை): பார்க்கிங் இல்லாத தங்கும் விடுதிகளுக்கு அரசு அனுமதி தருவது ஏன் முதல்வர் ரங்கசாமி: ேஹாம் ஸ்டேக்களாக வீடுகள் மாற்றப்பட்டு வருவது உண்மை தான். புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கூடுதலாக தங்கும் விடுதிகள் அதிகம் தேவைப்படுகின்றது. இதன் காரணமாக 'ேஹாம் ஸ்டே' என்ற பெயரில் தங்கும் விடுதிகள் அமைக்கப்படுகின்றன. இவற்றை முறைப்படுத்த வேண்டும் என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நல்ல யோசனை. ேஹாம் ஸ்டேக்களை கணக்கெடுத்து முறைப்படுத்தபடும். இதன் மூலம் நகராட்சிக்கும் வருவாய் கிடைக்கும். பார்க்கிங் பிரச்னையை பொருத்தவரை காவல் துறை, நகராட்சி ஒருங்கிணந்து நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை