அரசு ஊழியர்களுக்கு போனஸ் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரி: அரசு ஊழியர்களுக்கு விரைவில் போனஸ் வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.புதுச்சேரி அரசு சார்பில், தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை கூடத்தில் தீபாவளி சிறப்பு பட்டாசு அங்காடி திறப்பு விழா நடந்தது. விழாவில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்று சிறப்பு அங்காடியை திறந்து வைத்து, பட்டாசு விற்பனையை துவக்கி வைத்தார். முதல் விற்பனையை அரசு கொறடா ஆறுமுகம், ரமேஷ் எம்எல்.ஏ., ஆகியோர்பெற்றுக் கொண்டனர்.பின், முதல்வர் கூறுகையில், 'இந்த சிறப்பு அங்காடியில் அனைத்து விதமான பட்டாசுகள் குறைந்த விலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. வரும் 21ம் தேதி முதல் மளிகை பொருட்கள் அங்காடி திறக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு விரைவில் தீபாவளி போனஸ் அறிவிக்கப்படும்' என்றார்.