முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கல்
புதுச்சேரி : திருபுவனை தொகுதி என்.ஆர்.காங்., சார்பில் நடந்த முதல்வரின் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். முதல்வர் ரங்கசாமி 75வது பிறந்தநாள் விழா திருபுவனை தொகுதி என்.ஆர்.காங்., சார்பில் மதகடிப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா தலைமை தாங்கி, இளைஞர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, உணவு வழங்கப்பட்டது. விழாவில், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் லட்சுமி நாராயணன், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் ரமேஷ், லட்சுமிகாந்தன், பாஸ்கர், கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயபால், மாநில செயலாளர் அழகு, தொண்டரணி தலைவர் வீரா, வன்னியர் பாதுகாப்பு இயக்க தலைவர் செந்தில், திருபுவனை தொகுதி தலைவர் ராஜா, துணைத் தலைவர் சக்திவேல், பொதுச் செயலாளர் பாலு, மாநில இளைஞரணி செயலாளர் ராஜா, மேற்கு மாவட்ட தலைவர் பாலமுருகன், துணைத் தலைவர் காளிதாஸ், செயலாளர்கள் விஸ்வலிங்கம், சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, திருபுவனை தொகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் வழங்கப்பட்டது.