உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / படைவீரர் தினம் முதல்வர் வாழ்த்து 

படைவீரர் தினம் முதல்வர் வாழ்த்து 

புதுச்சேரி: படைவீரர்கள் தினத்தையொட்டி, முன்னாள் படைவீரர்களுக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக விளங்கிய பீல்ட் மார்ஷல் கே.எம்.கரியப்பா சேவையை அங்கீகரித்து, ஆண்டுதோறும் ஜன. 14ம் தேதி படைவீரர் தினம் கொண்டாடப் படுகிறது. நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாட்டை காக்கின்ற படைவீரர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்கள் காரணமாக, குடிமக்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர்.நாட்டினை பாதுகாக்கும் பணியில் தன்னலம் பாராமல் கடமை புரிந்த முன்னாள் படைவீரர்களை போற்றும் வகையில், அவர்களின் நலன்களை காப்பதில் அரசு எப்போதும் உறுதியாக நிற்கும். அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி