ஆலங்குப்பம் கோவிலில் மிளகாய் பொடி அபிேஷகம்
வானுார்: புதுச்சேரி அடுத்த ஆலங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் நடந்தது.இக்கோவிலில் மயானக் கொள்ளை விழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விரதம் மேற்கொண்ட பக்தர்களுக்கு மிளகாய் பொடி அபிஷேகம் செய்யப்பட்டது.இரவு பார்வதி பரமசிவன் வேட மணிந்து வீதியுலா நடந்தது. இன்று 9ம் தேதி இரவு 7:00 மணிக்கு ரணகளிப்பு, அங்காளம்மன் மின்விளக்கு அலங்காரத்துடன் வீதியுலா நடக்கிறது. நாளை 10ம் தேதி மாலை 6:00 மணிக்கு, மயானக்கொள்ளை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஊராட்சி மக்கள் செய்திருந்தனர்.