உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சித்தானந்த சுவாமி குருபூஜை வரும் 29ம் தேதி நடக்கிறது

சித்தானந்த சுவாமி குருபூஜை வரும் 29ம் தேதி நடக்கிறது

புதுச்சேரி: கருவடிக்குப்பம், குரு சித்தானந்த சுவாமியின் 189ம் ஆண்டு குரு பூஜை வரும் 29ம் தேதி நடக்கிறது. கருவடிக்குப்பத்தில் ஜீவசமாதி அடைந்த குரு சித்தானந்த சுவாமியின் 189ம் ஆண்டு குரு பூஜை விழா வரும் 29ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி, வரும் 28 ம் தேதி மாலை 6:00 மணிக்கு கலச பிரதிஷ்டை, கணபதி ேஹாமம், இரவு 8 மணிக்கு பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடக்கிறது. மறுநாள் 29ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், ருத்ர ேஹாமம் நடக்கிறது. தொடர்ந்து காலை 7:30 மணிக்கு, சுவாமிக்கு மகா அபிேஷகம், 9 மணிக்கு பூர்ணாஹூதி, 9:30 மணிக்கு கலசம் புறப்பாடாகி சுவாமிகளுக்கு கலசாபிேஷகம் நடக்கிறது. காலை 10:30 மணிக்கு அலங்காரம் செய்து, மகா தீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 10 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கிறது. குரு சித்தானந்த சுவாமி குரு பூஜைக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் தேவஸ்தானத்தில் கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும், மகா அபிேஷகத்திற்கு தேவையான பால், பழம், தேன் விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களை வரும் 29ம் தேதி காலை 7 மணிக்குள் தேவஸ்தானத்தில் வழங்கிடலாம். குருபூஜை ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !