அரசு மருத்துவ கல்லுாரியில் 14ம் தேதி வகுப்பு துவக்கம்
புதுச்சேரி: கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 14ம் தேதி வகுப்பு துவங்க உள்ளது.அரசு ஒதுக்கீட்டில் உள்ள 131 இடங்களில், 127 மாணவர்கள் சேக்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. கல்லுாரியில் சேர்ந்த மாணவர்களுக்கு வரும் 14ம் தேதி வகுப்பு துவங்க உள்ளது. அன்று மதியம் 2:00 மணி முதல் 4:30 மணி வரை, கல்லுாரி கருத்தரங்கு கூடத்தில் அறிமுக நிகழ்ச்சி நடக்கிறது.இத்தகவலை கல்லுாரி டீன் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.