உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக களமிறங்கிய கல்லுாரி மாணவர்கள் தீபாவளி சீசன் டிராபிக் ஜாம் சரி செய்ய முயற்சி

போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக களமிறங்கிய கல்லுாரி மாணவர்கள் தீபாவளி சீசன் டிராபிக் ஜாம் சரி செய்ய முயற்சி

புதுச்சேரி : டிராபிக் ஜாம் சரிசெய்ய போக்குவரத்து போலீசாருடன் இணைந்து கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர். புதுச்சேரியில் சாதாரண நாட்களிலே டிராபிக் ஜாம் கடுமையாக உள்ளது. தற்போது தீபாவளி சீசன் துவங்கி விட்டதால், நகர வீதிகள் அனைத்தும் கடும் டிராபிக் ஜாமில் சிக்கி தவித்து வருகிறது. புதுச்சேரி வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கூடாது, சாலையில் தாறுமாறாக பல மாதங்களாக நிறுத்தி வைத்திருக்கும் டிராவல்ஸ் வாகனங்களை அகற்ற கூடாது என ஆட்சியாளர்களின் கடுப்பாடுகளை மீறி போக்குவரத்து பிரச்னையை எப்படி சமாளிப்பது என தெரியாமல் போலீசாரும் கையை பிசைந்து வருகின்றனர்.இந்நிலையில், தற்காலிக தீர்வாக தீபாவளி வரை சாலையில் ஏற்படும் டிராபிக் ஜாம் பிரச்னையை சரிசெய்ய கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர்.என்.எஸ்.எஸ்., மாணவர்கள் 30 பேர் நேற்று நகரின் முக்கிய சந்திப்புகளில், கிழக்கு போக்குவரத்து போலீசாருடன் இணைந்து போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டனர். முன்னதாக இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணிகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். ஒவ்வொரு நாளும் ஒரு கல்லுாரி வீதம் 8 நாட்களுக்கு 8 கல்லுாரி மாணவர்கள் போக்குவரத்து போலீசாருடன் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ