உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணவெளியில் போர்வெல் அமைக்க ஆணையர் ஆய்வு

மணவெளியில் போர்வெல் அமைக்க ஆணையர் ஆய்வு

திருக்கனுார்: மணவெளி கிராமத்தில் புதிதாக போர்வெல் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய ஆணையர் எழில்ராஜன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மண்ணாடிப்பட்டு தொகுதி கைக்கிலப்பட்டு சங்கராபரணி ஆற்றின் கரையோரம் பொதுப்பணித்துறை மூலம் அமைக்கப்பட்ட போர்வெல் மூலம் கைக்கிலப்பட்டு, கொடாத்துார், மணவெளி ஆகிய கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், மணவெளி கிராமத்திற்கு வரவேண்டிய குடிநீர் அழுத்தம் குறைவு காரணமாக தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மணவெளிக்கு தனியாக போர்வெல் அமைத்து, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொகுதி அமைச்சர் நமச்சிவாயத்திடம் கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து, அமைச்சர் உத்தரவின் பேரில் மணவெளியில் புதிதாக போர்வெல் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்ய மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் நேற்று அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இதில், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை