மேலும் செய்திகள்
தடையை மீறி ஆர்ப்பாட்டம்
25-Feb-2025
ஏ.ஐ.டி.யு.சி., ஆர்ப்பாட்டம்
05-Mar-2025
புதுச்சேரி : இந்திய கம்யூ., மா.கம்யூ., மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் சார்பில் பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாதா கோவில் அருகே நடந்தது.இந்திய கம்யூ., மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செயலாளர் புருஷோத்தமன் ஆகியோர் தலைமை தாங்கினர்.முன்னாள் அமைச்சர் விசுவநாதன், தேசியக் குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், பொருளாளர் சுப்பையா, மாநில செயற்குழு உறுப்பினர்கள், ராஜாங்கம், பிரபுராஜ், கொளஞ்சியப்பன், சீனிவாசன், அருள், விஜயா உட்பட பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், ஏ.எப்.டி, சுதேசி, பாரதி பஞ்சாலைகளின் இடத்தை பயன்படுத்தி ஜவுளிப்பூங்கா அமைத்து, வேலை வாய்ப்பு வழங்கிட, திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்து விவசாய உற்பத்திக்கு விரிவான திட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
25-Feb-2025
05-Mar-2025