உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புகார் பெட்டி: அடிக்கடி மின் தடை

புகார் பெட்டி: அடிக்கடி மின் தடை

வேல்ராம்பட்டு மறைமலை நகர் பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அமர்நாத், வேல்ராம்பட்டு. போக்குவரத்து நெரிசல் ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. மோகன்ராஜ், புதுச்சேரி. குடிமகன்கள் அட்டகாசம் தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் மது குடிப்பவர்கள் காலி பாட்டில்களை அங்கேயை உடைத்து வீசி செல்கின்றனர். மாறன், தட்டாஞ்சாவடி. சாலையில் மெகா பள்ளம் செல்லிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மெகா சைஸ் பள்ளத்தால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது. கணபதி, செல்லிப்பட்டு. தெரு நாய்கள் தொல்லை அன்னை சிவகாமி நகரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். காமராஜ், மோரீசான் தோட்டம். சாலையில் மண் குவியல் அரியாங்குப்பம் முதல் தவளக்குப்பம் வரை சாலையோரத்தில் மண் குவிந்து கிடப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மாரியப்பன், அரியாங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை