உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராகுலுக்கு கொலை மிரட்டல் போலீசில் காங்., புகார்

ராகுலுக்கு கொலை மிரட்டல் போலீசில் காங்., புகார்

புதுச்சேரி: காங்., தலைவர் ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பெரியக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரிடம் நேற்று புகார் அளித்தனர்.அதில், 'பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த பொறுப்பாளர்கள், தங்கள் அரசியலமைப்பு பொறுப்புகளை மறந்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு கொலை மிரட்டல் விடுத்தது நாட்டு மக்களின் மத்தியில் அமைதியை குலைக்கும் வேலை. கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குவியும் புகார்கள்

இதே கோரிக்கையை வலியுறுத்தி, காங்., சீனியர் துணைத் தலைவரும், காமராஜர் நகர் தொகுதி பொறுப்பாளருமான தேவதாஸ் தலைமையில் மூத்த தலைவர் மணி, மாநில காங்., துணைத் தலைவர் தமிழரசி, பிரதேச காங்., உறுப்பினர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.ஏம்பலம் தொகுதி காங்., பிரமுகர் மோகன்தாஸ் தலைமையில், நிர்வாகிகள் பாஸ்கர், கனிக்கண்ணன், இளைஞர் காங்., மாநில பொதுச் செயலாளர் நெல்சன், சசிதரன், வீரமணி உள்ளிட்டோர் கிருமாம்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை