உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  காங்., நலத்திட்ட உதவி வழங்கல்

 காங்., நலத்திட்ட உதவி வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி காங்., கட்சி சார்பில் 'மகளிர் கைகளில் மகத்தான மாற்றம்' என்ற தலைப்பில் மகளிர் முன்னேற்ற செயல் விளக்க கூட்டம், முத்தியால்பேட்டை லலிதா மகாலில் நடந்தது. காங்., மாநில செயலாளர் ஈரம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., அகில இந்திய காங்., கட்சி செய்தி தொடர்பாளர் டோலி சர்மா ஆகியோர் கலந்துகொண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். கூட்டத்தில் காங்., சீனியர் துணை தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பாலன், அனந்தராமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை