ஆச்சார்யா கல்லுாரியில் அரசியலமைப்பு தின விழா
புதுச்சேரி: வில்லியனுார் ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் அரசியலமைப்பு தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் உஷாதேவி தலைமை தாங்கினார். கலையரசன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு கலந்து கொண்டு இந்திய அரசியல் சாசனம் சட்டத்தின் சிறப்பு அம்சம் குறித்தும், அதனை இயற்றிய அம்பேத்கர் சிறப்புகள் குறித்தும், அரசியல் சாசனத்தின் முகப்புரைகள் குறித்தும் பேசினார். அரசு வழக்கறிஞர் கணேஷ் ஞானசம்பந்தன், வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் ஆகியோர் அரசியல சாசனத்தின் முக்கியத்துவம் குறித்தும், போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவது குறித்தும் பேசினர். நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி பல்கலைக்கழக ஆய்வு மாணவர் ஸ்ரீராம் நன்றி கூறினார்.