உள்ளூர் செய்திகள்

ஆலோசனைக் கூட்டம்

அரியாங்குப்பம்: கடற்கரை சாலையில், தமிழ் புத்தாண்டை கொண்டாவது குறித்து அரியாங்குப்பத்தில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.அரியாங்குப்பம் அடுத்த மணவெளி பகுதியில் இசைப்பூக்கள் குழுவின் சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இளஞ்செழியன் தலைமை தாங்கினார். கலைவாணன் முன்னிலை வகித்தார். சட்ட ஆலோசகர் சிவக்குமார், துணை தலைவர்கள் தங்கதுரை, திலீபன், பொதுச் செயலாளர்கள் குமரன், வேல்முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.வரும் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டை, பாண்டி மெரினா கடற்கரையில், சிறப்பாக கொண்டாடுவது குறித்து முடிவு செய்யப்பட்டது.அதில், பாரம்பரிய விளையாட்டுகள், கரகாட்டம், தாரை தப்பட்டை, சிலம்பாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை நடத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை