உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

 கலெக்டர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி: கலெக்டர் தலைமையில், போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. புதுச்சேரி தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடந்தது. மாவட்ட தேர்தல் அதிகாரி, குலோத்துங்கன் தலைமையில் நடந்த கூட்டத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். அதில் ஓட்டுச்சாவடிகளின் பாதுகாப்பு மற்றும் பதற்றமான பகுதிகளைக் கண்டறிந்து அங்கு கூடுதல் போலீசாரை நியமிப்பது, தேர்தல் நடத்தை விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இரவு நேர ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தவும், மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி, அனுமதியின்றி பணம் அல்லது பொருட்கள் கொண்டு செல்வதைத் தடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை