உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குழந்தைகளுக்கான தொடர் மருத்துவ கண்காணிப்பு திட்டம் துவக்கிவைப்பு

குழந்தைகளுக்கான தொடர் மருத்துவ கண்காணிப்பு திட்டம் துவக்கிவைப்பு

புதுச்சேரி: புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில், பிறந்த குழந்தைகளுக்கான தொடர் மருத்துவக் கண்காணிப்பு இணைப்பு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைகள் நல பிரிவு சார்பில், தேசிய பிறந்த குழந்தைகள் வார விழாவையொட்டி ‘பிறந்த குழந்தைகளுக்கான தொடர் மருத்துவக் கண்காணிப்பு இணைப்பு திட்டம் துவக்கப்பட்டது. மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அய்யப்பன் துவக்கி வைத்தார். குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் சரவணன், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டத்தின் மூலம் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பும் குழந்தைகளுக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பு உறுதி செய்யப்படும். குறிப்பாக குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவ பராமரிப்பு கிடைக்கும். மேலும், பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் நலப் பிரச்னைகளை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியும். கூடுதல் மருத்துவ பராமரிப்பு தேவைப்படும் குழந்தகள் மாவட்ட ஆரம்பகால தலையீட்டு மையத்துடன் இணைக்கப்படுவர். என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ