உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பள்ளத்தில் விழுந்த பசு மாடு மீட்பு

பள்ளத்தில் விழுந்த பசு மாடு மீட்பு

புதுச்சேரி: பள்ளத்தில் விழுந்த பசு மாட்டை, தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். மூலகுளம், எம்.ஜி.ஆர்., நகர் செயின்ட் லுாயிஸ் கான்வென்ட்டில் புதியகட்டடம்,கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. நேற்று காலை 9:00 மணியளவில், அந்த வழியாக சென்ற பசு மாடு, பள்ளத்தில் விழுந்து வெளியே வரமுடியாமல் தவித்தது. மாடு சினையாக இருந்தது. தகவலறிந்த கோரிமேடு தீயணைப்பு துறை நிலைய அதிகாரி பாலமுருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து, ஒரு மணி நேரம் போராடி, மாட்டை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !