4ம் வட்டார அளவில் கிரிக்கெட் போட்டி
வில்லியனுார் : புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் நான்காவது வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளி நடத்தி வருகிறது.அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான சீனியர், ஜூனியர் பிரிவுக்கான கிரிக்கெட் போட்டி மதகபடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு தொண்டமாநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் மனோன்மணி தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் ரகு வரவேற்றார். கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் நடராஜன் போட்டியை துவக்கி வைத்தார்.சீனியர் பிரிவில் நடந்த போட்டியில் அரும்பார்த்தபுரம் புளு ஸ்டார் பள்ளி முதலிடம், பி.எஸ்.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாம் இடம், காட்டேரிக்குப்பம் அரசுமேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடம், சாய்ராம் பள்ளி நான்காம் இடம் பிடித்தது.ஜூனியர் பிரிவில் நடந்த போட்டியில் பொறையூர் ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி முதலிடம், ஊசுடேரி பாரத் வித்யாஷ்ரம் பள்ளி இரண்டாம் இடம், புளு ஸ்டார் பள்ளி மூன்றாம் இடம், இந்தோஜா பள்ளி நான்காம் இடம் பிடித்தது.வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். உடற்கல்வி விரிவுரையாளர் முரளிதரன் நன்றி கூறினார்.