உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தவளக்குப்பத்தில் காகங்கள் இறப்பு

 தவளக்குப்பத்தில் காகங்கள் இறப்பு

அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் காகங்கள் இறந்ததை, அரசு பரிசோதனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகூரில் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காகங்கள் திடீரென இறந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பகுதியில் நேற்று இரண்டு காகங்கள் இறந்து கிடந்தன. பாகூரில் இறந்த காகங்கள் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளதா என, பூரணாங்குப்பம் பகுதியில் அரசு சோதனை செய்ய வேண்டும். தொடர்ந்து, காகங்கள் இறப்பது, பறவை காய்ச்சலாக இருக்குமா என்ற சந்தேகம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி