உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மோசடி போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்

மோசடி போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்

புதுச்சேரி : புதுச்சேரியில் மோசடி மற்றும் திருட்டில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.இது குறித்துஅவர் கூறியதாவது:கடந்த சில தினங்களுக்கு முன்பு உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தில், ரூ. 22 லட்சத்துடன் பிடிபட்ட நபர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தன.இதில் போலீஸ்துறையின் தீவிர விசாரணைக்கு பிறகு அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர், இரு காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது சரியான நடவடிக்கை இல்லை. ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டது அந்த இன்ஸ்பெக்டர் செய்த தவறுக்கு உரிய தண்டனை அல்ல. நியாயமாக அவர்மீது திருட்டு வழக்கு தொடர வேண்டும்.கணக்கில் வராத அளவுக்கு அதிகமான பணத்தை ஒருவர் வைத்திருப்பதை, சம்மந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கண்டுபிடித்தால் அவரைஉடனடியாக அந்த போலீஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள மாவட்ட நீதிபதியிடம் அனுப்பி இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில்,வணிகவரித்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும்.பணத்திற்குரிய ஆவணம் சரியாக இருந்தால் சரி பார்த்து அவரே திருப்பி கொடுத்து இருக்கலாம். ஆனால் இவை எதையும் அவர் செய்யவில்லை. இது போன்ற குற்றத்திற்கு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்வது மட்டும் உரிய தண்டனையாக இருக்காது. தவறு செய்தவர்களை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை