உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து வெல்டர் பலி

காரைக்கால் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து வெல்டர் பலி

காரைக்கால்: காரைக்காலில் தனியார் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து வெல்டிங் தொழிலாளி இறந்தார். காரைக்கால் நெடுங்காடு மேலகாசாகுடி சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று தொழிற்சாலையில் பழைய இரும்பு பொருட்களை வெட்டும் பணியில் மயிலாடுதுறை மாவட்டம், பூவாலை நடுத்தெருவைச் சேர்ந்த பெரியசாமி மகன் கண்ணன், 42, மற்றும் சக ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். கண்ணன் வெல்டிங் செய்து கொண்டிருந்தபோது, திடீரென சிலிண்டர் வெடித்தது. படு காயமடைந்த கண்ணனை சக ஊழியர்கள் மீட்டு, காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தகவல் அறிந்த தொகுதி எம்.எல்.ஏ., விக்னேஸ்வரன் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை