மேலும் செய்திகள்
தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சம்
08-Oct-2025
பாகூர்: பனித்திட்டு கிராமத்தில் உள்ள ஓடை மேம்பாலம் வலுவிழந்த நிலையில், தடுப்பு சுவரும் இடிந்து விழுந்துள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. ஏம்பலம் தொகுதி, கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு - ரெட்டிச்சாவடி சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் பனித்திட்டு ஓடையின்குறுக்கே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, புதுச்சேரி பொதுப்பணித்துறை சார்பில், மேம்பாலம் கட்டப்பட்டது. பொது மக்களின் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த மேம்பாலம் தற்போது பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, ஷட்டர்களும் உடைந்து பழுதாகி வலுவிழந்த நிலையில் காணப்படுகிறது. மேலும், பாலத்தின் கீழ் பகுதியில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரியும் வகையில் உள்ளது. அதோடு, மட்டுமின்றி பாலத்தின் தடுப்பு சுவர் சுமார் 10 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்து திறந்த நிலையில் உள்ளது. இதனால், அவ்வழியாக செல்லும் பொது மக்கள், விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளதால், அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, இந்த பாலத்தை உடனடியாக சீரமைத்திட புதுச்சேரிஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
08-Oct-2025