உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அங்காளம்மன் கோவிலில் இரவு 7 மணிக்கு தரிசனம்

 அங்காளம்மன் கோவிலில் இரவு 7 மணிக்கு தரிசனம்

புதுச்சேரி: சின்ன சுப்பாரயப்பிள்ளை வீதி, அங்காளம்மன் கோவிலில் வரும் 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு பொது தரிசனம் நடைபெறும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, சின்ன சுப்பாரயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, வரும் 3ம் தேதி வைத்திக்குப்பம் மாசிமக தீர்தவாரிக்கு, காலை 5:30 மணியளவில் கோவிலில் இருந்து புறப்பட்டு, 7:30 மணிக்கு வைத்திக்குப்பம் கடலில் தீர்த்தவாரியில் பங்கேற்கிறார். பின், அங்கிருந்து 9:00 மணியளில் புறப்பட்டு, நகரப் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வருகிறார். அதன்பிறகு இரவு 7:00 மணிக்கு பரிகார பூஜை செய்தபின், கோவில் வழக்கம் போல் திறந்து, பொது தரிசனம், அர்ச்சனை நடக்கிறது. இத்தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை