மகள் மாயம்; தந்தை புகார்
அரியாங்குப்பம்; கோவிலுக்கு சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.தவளக்குப்பம் அடுத்த பெரியக்காட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திசைபாலன் மகள் கலையரசி, 29; இவர் கல்லுாரி படிப்பை முடித்து வீட்டில் இருந்தார்.இந்நிலையில், கடந்த 24ம் தேதி, தவளக்குப்பம் - அபிேஷகப் பாக்கம் சாலையில் உள்ள சிவன் கோவிலில் நடந்த பிரதோஷ பூஜைக்காக, தந்தையுடன் கலையரசி, சென்றார். அதையடுத்து, கோவிலில், பூஜை முடிந்த பின் பார்க்கும் போது, கலையரசி திடீரென மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து, அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில்,தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.