எம்.எல்.ஏ., உதவியாளருக்கு கொலை மிரட்டல்
புதுச்சேரி; முத்தியால்பேட்டை, சோலை நகர் பகுதியை சேர்ந்தவர் தினகரன், 62. சமூக நலத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ.,வுக்கு உதவியாளராக உள்ளார். முத்தியால்பேட்டை டி.வி.நகர் செந்தில் என்பவர் பொதுமக்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வருவாய்த்துறை சான்றிதழ் பெற்று தருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வி.ஏ.ஓ.,விடம் சான்றிதழ்களை செந்திலிடம் கொடுக்க வேண்டாம் என, தினகரன் கூறினார். ஆத்திரமடைந்த செந்தில், வி.ஏ.ஓ.,விடம் வாக்குவாதம் செய்துவிட்டு, தினகரனை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். தினகரன் புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.