கொலை மிரட்டல்: இருவர் மீது வழக்கு
புதுச்சேரி : கட்டட மேஸ்திரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.லாஸ்பேட்டையை சேர்ந்தவர் பாலாஜி, 29; அதே பகுதியில் மனை வாங்கி வீடு கட்டிவருகின்றார். இவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த அரவிந்த் இவரது உறவினர் சுரேஷ் இருவரும் சேர்ந்து, நேற்று முன்தினம் வீடு கட்டும் பணியில் இருந்த மேஸ்திரி முத்துவை, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார், அரவிந்த் உட்பட இருவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.