உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அடிக்காசு வசூலிக்கும் முறையை மீண்டும் அமல்படுத்த முடிவு

 அடிக்காசு வசூலிக்கும் முறையை மீண்டும் அமல்படுத்த முடிவு

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சியில் அடிக்காசு வசூலிக்கும் முறையை மீண்டும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஸ்ரீ ஜித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பொதுவெளி, சாலையோரம் மற்றும் அங்காடிகள் அருகில் உள்ள இடங்களில் செயல்படும் தள்ளுவண்டி மற்றும் நடைபாதை கடைகளுக்கு நகராட்சி சட்ட விதிகளின்படி அடிக்காசு வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்தது. ஆண்டும் தோறும் மின்னணு ஏலம் மூலம் ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, நகராட்சி சார்பில் அடிக்காசு வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அடிக்காசு வசூல் முறை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது சாலையோரத்தில் எண்ணற்ற கடைகள் வந்தததை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் விதமாக மீண்டும் அடிக்காசு வசூலிக்கும் முறையை நகராட்சி அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதற்கான கடந்த மாதம் 22ம் தேதி நடந்த ஏலத்தில் புதிய ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டனர். எனவே கடந்த 1ம் தேதி முதல் நகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மூலம் அடிக்காசு 1 சதுர மீட்டருக்கு 20 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி