மேலும் செய்திகள்
காலவரையற்ற ‘ஸ்டிரைக்’ காசிமேடு மீனவர்கள் முடிவு
30-Sep-2026
புதுச்சேரி: டீசல் மானியம், தடைக்கால நிவாரணத் தொகையை உயர்த்த வேண்டும் என மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் விசைப்படகு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். புதுச்சேரியில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள விசைப்படகு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் வேலு தலைமையில், சங்க நிர்வாகிகள் மற்றும் விசைப்படகு உரிமையாளர்கள், மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை சட்டப்சபையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். சந்திப்பின்போது, மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவிடம் முன்வைத்தனர். குறிப்பாக, மீன்பிடி தொழிலுக்கு வழங்கப்படும் டீசல் மானிய விலையை உயர்த்தி வழங்க வேண்டும். மீன்பிடித் தடைக்காலத்தில் வழங்கப்படும் நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர். மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
30-Sep-2026