உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குடற்புழு நீக்கம் செயல் விளக்கம்

குடற்புழு நீக்கம் செயல் விளக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம், கரிக்கலாம்பாக்கம் உழவர் உதவியகம் சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான குடற்புழு நீக்கம் செயல்விளக்க முகாம் கோர்க்காட்டில் நடந்தது.வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கினார். கால்நடைத்துறை இணை இயக்குநர் குமரவேல் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்வதன் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொடர்ந்து, கால்நடை விவசாயிகளுக்கு சத்துமாவு, சத்து டானிக் மற்றும் அம்மை நோய் தடுப்பு மருந்து ஆகியவை வழங்கப்பட்டது.டாக்டர் செல்வமுத்து கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் குடற்புழு நீக்கம் குறித்து செயல் விளக்கம் அளித்தார்.ஏற்பாடுகளை அலுவலக ஊழியர் தம்புசாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி