உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 குழந்தைகளுக்கு நீரிழிவு நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் குழந்தைகளுக்கு அதிகரித்து வரும் டைப் 1 நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஜிப்மர் குழந்தை மருத்துவத் துறை சார்பில், நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, குழந்தை நல மருத்துவ துறை பேராசிரியர் தில்லி குமார் தலைமை தாங்கினார். செவிலியர் அதிகாரி பரிமளா, டைப் 1 நீரிழிவு கொண்ட குழந்தைக்கு இன்சுலின் செலுத்துதல், ரத்த சர்க்கரை அளவை கண்காணித்தல், குறைந்த, அதிக சர்க்கரை அறிகுறிகளை அடையாளம் காணுதல் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் நடைமுறை சவால்களை சமாளிக்கும் வழிகளை விளக்கினார். டாக்டர் மிலன் முகம்மது, உணவு தொடர்பான வழிகாட்டுதலையும், உளவியல் நிபுணர் அகில் மனநல சவால்கள் குறித்தும், மன அழுத்த மேலாண்மை மற்றும் நேர்மறையான வாழ்க்கை அணுகுமுறை குறித்தும் பேசினார். முனைவர் நான்ஸி பிரேம்குமார், டைப் 1 நீரிழிவு பாதிப்பு கொண்ட பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தேர்வின் போது சர்க்கரை பரிசோதனை கருவி மற்றும் சிற்றுண்டி எடுத்துச் செல்ல அனுமதி போன்ற அரசின் அனுமதிகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில், மொபைல் சாதனத்தின் மூலம் ரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து கண்காணிக்க உதவும் வகையிலான, டைப் 1 நீரிழிவு பராமரிப்பில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றமான கண்டினியூஸ் குளுக்கோஸ் மானிட்டரிங் தொழில்நுட்பமும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் டைப் 1 நீரிழிவு நோயை அடையாளம் கண்டு சரியான சிகிச்சை அளித்தால், குழந்தைகளின் வாழ்க்கை தரம் மற்றும் எதிர்காலம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியை, டாக்டர் மிதிலேஷ் ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை