மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
1 hour(s) ago
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
3 hour(s) ago | 7
புதுச்சேரி : கடுமையான லோக்பால் சட்டம் கொண்டு வருவது குறித்து, பொது ஓட்டெடுப்பு நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக சேவகரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்தை, புதுச்சேரி அரசு மருத்துவர்கள் சங்கம் ஆதரிக்கிறது. உடலுக்கு புற்றுநோய் எவ்வளவு கேடு செய்யுமோ, அதுபோல சமுதாயத்திற்கு ஊழல் கேடு செய்யும். அதற்கு ஒரே மருந்து, கடுமையான லோக்பால் மசோதா மட்டுமே. எனவே, மத்திய அரசு உடனடியாக கடுமையான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பாராளுமன்றம் தான் சட்டத்தை இயற்ற இயலும் என்றாலும், அத்தகைய சட்டத்தை இயற்றுமாறு வற்புறுத்த, ஓட்டளிக்கும் நேர்மையான, தேசபக்தி கொண்ட ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை உண்டு. இந்தியர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் விரும்புவது கடுமையான லோக்பால் சட்டத்தைத் தான். மத்திய அரசுக்கு இதில் சந்தேகம் இருந்தால், பொது ஓட்டெடுப்பு நடத்த முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1 hour(s) ago
3 hour(s) ago | 7