உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு தொடக்க பள்ளியில் தேசிய  குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் 

அரசு தொடக்க பள்ளியில் தேசிய  குடற்புழு நீக்க மாத்திரை வழங்கல் 

புதுச்சேரி: புதுச்சேரி அரசின் நலவழித்துறை, லாஸ்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பெத்துசெட்டிபேட் அரசு தொடக்க பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை தமயந்தி தலைமை தாங்கினார். ஆசிரியர் குமரேசன் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் லில்லி புஷ்பராணி, உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம், ஹூமாயூன் முன்னிலை வகித்தனர். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி யுவராஜ், குடற்புழு நீக்க மாத்திரை நாள் பற்றி சிறப்புரையாற்றினர். சுகாதார மேற்பார்வையாளர் ராதாமுத்து, கை கழுவும் முறை குறித்து செய்முறை விளக்கமளித்தனர். தொடர்ந்து மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இதில், சுகாதார உதவி ஆய்வாளர்கள் ஜெகநாதன், ரேணுகாதேவி உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுரேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !