உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வாக்காளர் அட்டையை பெற்று கொண்டு டிக்கெட்; தடுக்க தி.மு.க., எம்.எல்.ஏ., கோரிக்கை

வாக்காளர் அட்டையை பெற்று கொண்டு டிக்கெட்; தடுக்க தி.மு.க., எம்.எல்.ஏ., கோரிக்கை

புதுச்சேரி : கலெக்டர் குலோத்துங்கனிடம், சம்பத் எம்.எம்.ஏ., கோரிக்கை மனு அளித்துள்ளார். மனுவில், 'புதுச்சேரியில் இன்று நடிகர் ரஜினி நடித்த கூலி திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை அனைத்து தியேட்டர்களும் ஒரே நேரத்தில் வெளியிடயுள்ளது. ஆனால், டிக்கெட் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தினரால் வாங்கப் பட்டதாக கூறப்படுகிறது. அந்த இயக்கத்தினர் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டு இலவசமாக டிக்கெட் கொடுப்பதாக விளம்பரம் செய்து வருவது, கண்டிக்கத்தக்க செயலாகும். இளைஞர்களின் வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு டிக்கெட் கொடுப்பதை, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவே கருத முடியும். வாக்காளர்களின் ஓட்டிற்கு பணம் கொடுப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி தண்டனைக் குரிய குற்றமாகும். எனவே, வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொண்டு சினிமா டிக்கெட் கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை