உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / நோயாளிகளுக்கு தி.மு.க., அமைப்பாளர் ஆறுதல்

நோயாளிகளுக்கு தி.மு.க., அமைப்பாளர் ஆறுதல்

புதுச்சேரி: திடீர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தி.மு.க., அமைப்பாளர் சிவா பார்வையிட்டு ஆறுதல் கூறினார். உருளையன்பேட்டை தொகுதி, கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் நேற்று திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, தி.மு.க., மாநில அமைப்பாளர் சிவா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஆகியோர்சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினர். தொகுதி செயலாளர் சக்திவேல், பொருளாளர் சசிகுமார், இளைஞரணி துணை அமைப்பாளர் தாமரைக்கண்ணன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை