உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி ராமகிருஷ்ண மடம் திருப்பணிக்கு நன்கொடை வழங்கல் 

புதுச்சேரி ராமகிருஷ்ண மடம் திருப்பணிக்கு நன்கொடை வழங்கல் 

புதுச்சேரி : புதுச்சேரி ராமகிருஷ்ண மடம் திருப்பணிக்காக திருபுவனை ராமகிருஷ்ண விவேகானந்தா கல்வி அறக்கட்டளை செயலர் சீனிவாசன் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார். புதுச்சேரி, லாஸ்பேட்டையில் இயங்கி வரும் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் கிளை மடமான புதுச்சேரி ராமகிருஷ்ண மடம் கடந்த மார்ச் 2022ம் ஆண்டு, சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தா மகராஜ் துவக்கிவைத்தார். இரண்டு ஆண்டுகளாக தனியார் இடத்தில் செயல்பட்டு வருகிறது.இதற்கிடையே, கடந்த பிப். 2023ம் ஆண்டு கருவடிகுப்பத்தில் மடத்திற்கு சொந்தமாக இடம் வாங்கப்பட்டு, அதில் ரூ. 17 கோடி மதிப்பீட்டில் திருப்பணி, தற்போதிய கொல்கத்தா பேலுார் மடத்தின் தலைவர் சுவாமி கவுதமானந்தா மகராஜ் அடிக்கல் நாட்டி பணிகள் நடந்து வருகிறது. இந்த மடம் திருப்பணிக்காக திருபுவனை ராமகிருஷ்ண விவேகானந்தா கல்வி அறக்கட்டளையின் செயலரும், தமிழ்நாடு ராமகிருஷ்ண விவேகானந்தா பாவ பிரசார் பரிஷித்தின் உறுப்பினருமான சீனிவாசன் நன் கொடையாக ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை, புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி நித்யேஷானந்தாவிடம் வழங்கி ஆசி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை