உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய வேண்டாம் சீனியர் எஸ்.பி., அட்வைஸ்

 போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்ய வேண்டாம் சீனியர் எஸ்.பி., அட்வைஸ்

புதுச்சேரி: புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் முன்னிலை வகித்தனர். 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சைபர் மோசடி தொடர்பாக புகார் தெரிவித்தனர். சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் பேசுகையில், 'பொதுமக்கள் ஏ.டி.எம்., கிரெட்டு கார்டு, பின் நம்பர் மற்றும் ஓ.டி.பி., விவரங்களை யாருக்கும் பகிர கூடாது. போலி ஆன்லைன் வார்த்தகத்திலும், சைபர் குற்றவாளிகள் உருவாக்கிய செயலிகளிலும், பணம் சம்பாதிக்கும் ஆசையில் வர்த்தகத்தை பற்றிய புரிதல் இல்லாமல் முதலீடு செய்ய வேண்டாம். வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வரும் ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் விளம்பரங்களை நம்ப வேண்டாம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ