| ADDED : செப் 28, 2026 10:55 PM
புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு நடன நிகழ்ச்சி நடந்தது. கடற்கரை சாலை, போலீஸ் தலைமையகம் எதிரே, பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சீனியர் எஸ்.பி., தீபிகா, எஸ்.பி., ஸ்ருதி தலைமை தாங்கினர். இதில், பாரத் வித்யாஸ்ரமம் பள்ளி மாணவர்கள் மற்றும் புதுச்சேரி நடனக் குழு கலைஞர்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடன நிகழ்ச்சியை நடத்தினர். இதனை கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் பார்த்து மகிழ்ந்தனர்.