மேலும் செய்திகள்
படைகளை குறைப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை.
13-May-2025
புதுச்சேரி : புதுச்சேரி, முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் எழில் கல்பனா, சமக்ரா சிக் ஷா மாநில திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.வேதியியல் விரிவுரையாளரான எழில் கல்பனா, யு.பி.எஸ்.சி.,யால் தேர்வு செய்யப்பட்டு, அரசு பள்ளிகளில் 6 ஆண்டுகளாக முதல்வராக பணியாற்றி வந்தார். அவர், கல்வித்துறையின் சமக்ரா சிக் ஷா மாநில திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி பிறப்பித்துள்ளார். இதையடுத்து, சமக்ரா சிக் ஷா மாநில திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்ட எழில் கல்பான அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
13-May-2025