உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மாணவர் சிறப்பு பஸ் விபத்து கல்வித்துறை விளக்கம் கேட்பு

 மாணவர் சிறப்பு பஸ் விபத்து கல்வித்துறை விளக்கம் கேட்பு

புதுச்சேரி: அரசு மாணவர் சிறப்பு பஸ் விபத்து குறித்து கல்வித்துறை சார்பில், விளக்கம் கேட்கப்படடுள்ளது. தவளக்குப்பத்தை சேர்ந்த சிவானந்தம், 62, என்பவர் நேற்று முன்தினம் மாலை கனகசெட்டி குளத்தில் இருந்து அரசு மாணவர் சிறப்பு பஸ்சை ஓடி சென்றார். பஸ் 100 அடி சாலை, ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகே வந்தபோது, சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துள்ளானது. தகவலறிந்த கிழக்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பஸ்சை ஓட்டிய சிவானந்தத்தை பிடித்து சோதனை செய்தபோது, அவர், குடிபோதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சிவானந்தம் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர். பின், நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதையடுத்து, நேற்று கல்வித்துறை சார்பில் விபத்து குறித்த விளக்கத்தையும், பஸ் மற்றும் டிரைவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு மற்றும் வாகன ஆவணங்கள் குறித்த தகவல்களை 5 நாட்களுக்குள் தனியார் பஸ் நிறுவன ஒப்பந்ததாரர், கல்வித்துறைக்கு அளிக்க வேண்டும் என, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ