உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பஸ் மோதி முதியவர் சாவு

பஸ் மோதி முதியவர் சாவு

புதுச்சேரி : தனியார் பஸ் மோதி இறந்த அடையாளம் தெரியாத முதியவர் யார் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.புதுச்சேரி, உழவர் சந்தை பழைய பஸ் நிலையம் அருகில், கடந்த 21ம் தேதி இரவு 8:45 மணியளவில், 60 வயது மதிக்கத் தக்க அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் சுப்பையா சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த தனியார் பஸ் மோதி இறந்தார். விபத்து குறித்து கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி