உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குளத்தில் மூழ்கி முதியவர் இறப்பு

குளத்தில் மூழ்கி முதியவர் இறப்பு

காரைக்கால் : குளத்தில் தவறி விழுந்த முதியவர் நீரில் மூழ்கி இறந்தார். காரைக்கால், நெடுங்காடு மேலகாசாகுடியை சேர்ந்தவர் ராமலிங்கம்,76; இவரது மனைவி பானுமதி. இவர் வெளியூர் சென்ற நிலையில், தனது தம்பி வீட்டில் தங்கியிருந்த ராமலிங்கம் நேற்று முன்தினம் சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு சென்றவர், நேற்று அதிகாலை பள்ளிக்கூடத் தெருவில் உள்ள குளத்தில் இறந்து கிடந்தார். நெடுங்காடு போலீசார், உடலை மீட்டு வழக்குப் பதிந்து விசாரித்ததில் நேற்று முன்தினம் இரவு குளக்கரையில் இருந்த சிமென்ட் கட்டையில் அமர்ந்திருந்தபோது, தவறி குளத்தில் விழுந்து நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை